fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸில் கலைநயமிக்க நகை கண்காட்சி, விற்பனை

ஈரோடு மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸில் கலைநயமிக்க நகை கண்காட்சி, விற்பனை

ஈரோடு மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸில் கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி, விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியை டாக்டர் முகமது இஸ்மாயில் மத்தின், ஜெயந்தி, விஜயகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ஈரோடு மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் கிளை தலைவர் ரனீஷ் டி.கே., துணை தலைவர் யாசர் அராபத், வர்த்தக மேலாளர் தியாகராஜன், கிளை மேலாளர் மனோஜ், கிளை ஊழியர்கள் பங்கேற்றனர்.

அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான மைன், பிரம்மாண்ட வடிவமைப்புகளை கொண்ட, வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட எரா, மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான பிரீசியா, கைவினை கலைஞர்களால் செய்யப்பட்ட எத்தினிக், கலாசாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிவமைப்புகளில் உருவான டிவைன், குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ஸ்டார்லெட் ஆகிய நகைகள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

கடந்த 18ம் தேதி தொடங்கிய இக்கண்காட்சி வரும் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இடம்பெற்றுள்ள நகைகளை வாடிக்கையாளர்கள் சிறப்பு விலையில் வாங்கலாம். மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் நிறுவனம் 11 நாடுகளில் 330க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் செயல்பட்டு வருகிறது.

வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து நகைகளுக்கும் ஆயுள் முழுவதும் இலவச பராமரிப்பு, அனைத்து நகைகளையும் எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உத்தரவாதம் உள்ளிட்ட 10 வாக்குறுதிகளை வாடிக்கையாளர்களுக்கு மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

படிக்க வேண்டும்

spot_img