பெருந்துறை கொங்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் ஜீன் 21ல் சர்வேதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
சிறப்பு விருந்தினர் பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவர் லோகேஷ் திருவனந்த புரத்தில் ஜூன் 18 ல் நடை பெற்ற இராணுவ பயிற்ச்சி முகாமில் கலந்துகொண்டு சிறப்பு யோகா செய்து காண்பித்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் அவர்கள் நினைவு பரிசு வழங்கினார்.
விழாவில் கல்லூரியின் தாளாளர் ஏ.வெங் கடாச்சலம், முதல்வர் மருத்துவர் சி.பிரதாப்சிங் துணைமுதல்வர் மருத்துவர்.எஸ்.வி.இராஜரத்தினம் கல்லூரி பேராசிரியர் என். விஜயராகவன் எ.சகாப்தின், துணை பேராசிரியர் எட்விட்ச் ரோசன் வாழ்த் துரை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து பெருத்துறை அரசு மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் யோகா விழிப்புணர்வு பேரணி மற்றும் பெருந்துறை, கோபி எடப்பாடி அரசு மருத்துவமனையுடன் இணைந்து மருத்துவ முகாம் நடைபெற்றது.



