அயர்லாந்து வாட்டர்போர்டில் உள்ள வாட்டர்போர்ட் கிரிஸ்டல், ஆடம்பர கண்ணாடி தயாரிப்பு நிறுவனம், நவீனமயாக்கப்பட்ட தொழிற்சாலையில் எல்ஜி இஜி சீரிஸ் இஜி22வி கம்ப்ரஸரை தேர்வு செய்துள்ளது.
வாட்டர் போர்டு கிரிஸ்டல் நிறுவனம், முன்பிருந்த ஏர் கம்ப்ரஸரை மாற்ற, அயர்லாந்தில் உள்ள எல்ஜியின் சேனல் பார்ட்னராக உள்ள ஏர்டெக் கம்ப்ரஸர்ஸ் லிமிடெட் நிறுவனத்தை அணுகியது.
நம்பகத்தன்மையும், மின்சிக்கனமும் கொண்ட புதிய 24 மணி நேரமும் இயங்கும் கம்ப்ரஸர் தேவைப்பட்டது. மிகவும் துல்லியமாக வடிவமைக்கும் கருவிகள் மற்றும் அதிநவீன இயந்திரங்களைக் கொண்ட கண்ணாடி தயாரிப்பு நிறுவனம் வாட்டர் போர்ட்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாட்டர் போர்ட் கிரிஸ்டல் நிறுவனத்துக்கு கம்ப்ரஸர் சேவையாற்றி வரும் ஏர்டெக் கம்ப்ரஸர்ஸ், விரிவான ஆய்வு மேற்கொண்ட பிறகு, புதிய எல்ஜி இஜி 22வி (மாற்றமிக்க வேகத்திறன்) ஏர்கம்ப்ரஸரை நிறுவ சிபாரிசு செய்து, 2021 ஏப்ரலில் நிறுவப்பட்டது.
வாட்டர்போர்ட் கிரிஸ்டல் நிறுவனத்தின் பொறியியல் மற்றும் பராமரிப்புத்துறை மேலாளர் டோனி எல்ஸ்டட் கூறுகையில், “ எல்ஜி இஜி22வி தொடரானது, எவ்வித சிக்கலும் இல்லாமல் ஓராண்டுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது” என்றார்.
வாட்டர் போர்ட் கிரிஸ்டல் நிறுவனம்
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து மண்டலத்தின் எல்ஜி நிறுவன மேலாளர் டெர்ரி மெக்கையர் பேசுகையில், “வாட்டர் போர்ட் கிரிஸ்டல் நிறுவனத்தின் இதயமாக எல்ஜி யுனிட் அமைந்ததில் பெருமை கொள்கிறோம்.
உலகின் பிரபலமான தூய்மையான கண்ணாடி தயாரிப்பாளருக்கு, துல்லியமாக பொருட்களை தயாரிக்க உதவி செய்வதோடு, நம்பகத்தன்மை மற்றும் ஆற்றல் சேமிப்பிலும் கைகொடுக்கிறோம்.
எல்ஜியில், எங்களது தொலை நோக்கு பார்வையே எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என்பது தான். இஜி சீரிஸ் கம்ப்ரஸரின் அழகிய வடிவமைப்பு,
உயர்ந்த வெப்பநிலையிலும் இயங்கும் விதத்தில் உள்ளது.
அயர்லாந்தின் கோர்க்கில் உள்ள ஏர்டெக் கம்ப்ரஷர்ஸ், ஆண்டு முழுவதும், 24 மணி நேரமும் எல்ஜியுடன் 2020 முதல் இணைந்து செயல்பட்டு வருகிறது” என்றார்.