கடலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் லட்சுமி காந்தன் பரங்கிப்பேட்டை வட்டாரம் மின்னணு பயிர் சாகுபடி பரப்பு கணக்கெடுப்பு பணியினை குறியாமங்கலம் கிராமத்தில் ஆய்வு செய்து கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளும் பணியாளர்களிடம் கரிப் பருவத்திற்கான அனைத்து பயிர்களையும், அனைத்து சர்வே எண்கள் மற்றும் உட்பிரிவுகள் விடுபடாமல் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்.
மேலும் பரங்கிப்பேட்டை வேளாண் விரிவாக்க மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேளாண்மை இணை இயக்குனர் மற்றும் வேளாண்மை துணை இயக்குனர் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் கதிரேசன் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கினர்.
பரங்கிப் பேட்டை வட்டார வேளா ண்மை உதவி இயக்குனர் ச.நந்தினி, வேளாண்மை அலுவலர் வீரமணி,துணை வேளாண்மை அலுவலர் சிவசங்கர், வேளாண் கிடங்கு மேலாளர் விக்டர், பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர் சுபாஷ் மற்றும் வேளாண் மை கிடங்கு உதவியாளர் உடன் இருந்தனர்.



