fbpx
Homeபிற செய்திகள்தருமபுரியில் ராட்சத பலூனை பறக்கவிட்டு தேர்தல் விழிப்புணர்வு

தருமபுரியில் ராட்சத பலூனை பறக்கவிட்டு தேர்தல் விழிப்புணர்வு

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வருகின்ற 23 ஏப்ரல் 2026 அன்று நடைபெற உள்ள தேர்தலில் தவறாமல் வாக்களிப்பேன் என்றும் என் வாக்கு விற்பனைக்கல்ல என்றும் உறுதி அளித்து வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, தேர்தல் வாசகங்கள் குறித்து அனைத்து பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் சதீஸ் வழங்கினார்.
மேலும், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளில் ஒட்டுவில்லைகளை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தொடர்ந்து அவர், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு ராட்சத பலூனை பறக்க விட்டார்.

இந்நிகழ்வுகளின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், மகளிர் திட்ட அலுவலர் சுந்தர்ராஜன், தேர்தல் நடத்தும் அலுவலர் காயத்ரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன், தருமபுரி நகராட்சி ஆணையர் வசந்தி, வட்டாட்சியர் சுகுமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img