fbpx
Homeபிற செய்திகள்போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

-சிதம்பரத்தில் போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது சிதம்பரம் தலைமை தபால் நிலையம் அருகில் இருந்து புறப்பட்டு 4 முக்கிய வீதிகளிலும் நடந்த இந்த பேரணியை சிதம்பரம் சார் ஆட்சியர் கிஷன்குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.


இதில் சிதம்பரம் வருவாய் வட்டாட்சியர் கீதா, கோட்ட கலால் வட்டாட்சியர் செல்வகுமார், முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் குகானந்தம், ஜெயமாலினி, சிதம்பரம் விஏஓ ஷேக் சிராஜ்தீன், சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் லயன்ஸ் சங்க தலைவர் மணியன், செயலாளர் மகேஷ், பொருளாளர் சைலேஷ் மற்றும் ஸ்ரீராகவேந்திரா கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img