சென்னை காவேரி மருத்துவமனை பிறவி குறைபாடான முதுகுத் தண்டு சீர்குலைவுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு முதுகுத் தண்டு பிரச்சனைகளை சரிசெய்யும் அறுவை சிகிச்சைகளை குறைந்த கட்டணத்திலும் மற்றும் இலவசமாகவும் வழங்குவதற்கான ஒரு விரிவான முன்னெடுப்பு திட்டத்தை பிராஜெக்ட் ஜீவன் செயல்திட்டம் என்ற பெயரில் தொடங்கியிருக்கிறது.
மித்ரா ரோட்டரி கிளப் மற்றும் பெங்க ளூரைச் சேர்ந்த மற்றொரு ரோட்டரி கிளப்பின் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்போடு இச்செயல்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
முள்ளந்தண்டு பிளவு, வடவுறைப்பிதுக்கம் என பாதிப்புகளால் அவதியுறும் வசதியற்ற சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அவர்களது வாழ்க்கையையே மாற்றி மேம்ப டுத்துகின்ற அறுவை சிகிச்சையை சாத்தியமாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
சிக்கல் நிறைந்த இந்த மருத்துவச் செயல்முறைகள் ஆழ்வார் பேட்டை காவேரி மருத்துவமனையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் குழுவால் மேற் கொள்ளப்பட்டது.
இதன் முதல் கட்டத்தில் எவ்வித கட்டணமோ, செலவோ இன்றி குறைந்தது 35 குழந்தைகளுக்கு முதுகுத்தண்டு பிரச்சனைகளை சரிசெய்வதற்கான அறுவை சிகிச்சைகள் ஜீவன் செயல்திட்டத்தின் கீழ் செய்யப்படும்.
ரோட்டரி கிளப்களுடன் இணைந்து இதற்கு முன்பு நடத்தப்பட்ட வெற்றிகரமான ஒத்துழைப் பின் கீழ் 100-க்கும் அதிகமான இத்தகைய அறுவை சிகிச்சைகள் கட்டணமின்றி இலவசமாக குழந்தைகளுக்கு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், “ஜீவன் செயல்திட்டத்தின் வழியாக இக்குழந்தை களின் உயிரை காப்பாற் றுவதுடன் இயல்பான வாழ்க்கையை இவர்கள் நடத்துவதற்கு உதவுவதும் எமது நோக்கமாகும்“ என்றார்.
தொடர்ந்து டாக்டர். பாலமுரளி கூறுகையில், “சரியான நேரத்தில் செய்யப்படும் சரியான இடையீட்டு சிகிச்சையின் மூலம் இக்குழந்தைகளின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை நம்மால் ஏற்படுத்த முடியும்“ என்றார்.
மித்ரா ரோட்டரி கிளப்பின் மாவட்ட ஆளுநர் ரொட்டேரியன் சரவணன் பேசுகையில், “ஜீவன் செயல்திட்டம் என்பது அர்த்தமுள்ள நடவடிக்கை வழியாக குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது” என்றார்.



