கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல்துறையினர் சார்பில் போதைப் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது போதை பொருட்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது பேரணியை காவல் ஆய்வாளர் மணிக்கண்டன் துவக்கி வைத்தார்.
இந்த பேரணி மேட்டுப்பாளையம் கோவை சாலை சிடிசி டிப்போ அருகே அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்து போதை பொருட்களின் தீமைகளை குறித்து கையில் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மது நாட்டுக்கும் உயிருக்கும் கேடு”, “போதை அது சாவின் பாதை”, “போதை யில் நீ, வீதியில் உன் குடும்பம்” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.
இந்த பேரணி தபால் நிலையம் சாலை வழியாக,அபிராமி திறையரங்கு வரை சென்று பள்ளி வாளகம் வந்த முடிவடைந் தது. தொடர்ந்து போதைப் பழக்கத் திற்கு எதிரான உறுதி மொழியினை காவல் ஆய் வாளர் மணிக்கண்டன் வாசிக்க, அனை வரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.