தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தேசிய சுகாதார திட்டம் 15 வது நிதிக்குழு (சுகாதார பிரிவு) மற்றும் சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் ரூபாய் 29 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்த புதிய கட்டிடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக காணொளி காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதன்படி, தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ66 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டிடம், மடத்தூர் பி – டி காலனி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ 63 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டிடம், கணேஷ் நகர் பகுதியில் ரூ60 லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடம், எழில் நகர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான ரூ30 லட்சம் மதிப்பில் துணை மைய கட்டிடம், முத்தம்மாள் காலனி பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான துணை மையக் கட்டிடம், விவிடி குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகில் ரூ10 கோடியே 73 லட்சம் மதிப்பில் நகர மாநாட்டு மையம், சிதம்பரம் நகர் பகுதியில் ரூ 16 கோடியே 22 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம் கட்டும் பணிகள் என மொத்தம் 29 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் முக. ஸ்டாலின் தலைமை செயலகத்தில் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
இதனையடுத்து 2ம் கேட் பத்திரகாளியம்மன் கோவில் அருகில் மாநகராட்சி மாநாட்டு மையம் வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை வகித்தார். மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் துணை மேயர் ஜெனிட்டா, பொறியாளார் சரவ ணன், உதவி ஆணையர்கள் சொர்ண லதா, சுரேஷ்குமாலீ;, கல்யாண சுந்தரம், உதவி பொறியாளர்கள் பிரின்ஸ் ராஜேந்திரன், முனீர்ரபிக், நகர்நல அலுவலர் வினோத்ராஜா, சுகாதார ஆய்வாளர் ராஜசேகரன், மாநகர செயலாளர் ஆனந்தசேரகன், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பால குருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, சுகாதாரகுழு தலைவர் சுரேஷ்குமார், நகரஅமைப்பு குழு தலைவர் ராம கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.