fbpx
Homeபிற செய்திகள்‘உலக பார்வை தினம் 2023’ அனுசரிப்பு

‘உலக பார்வை தினம் 2023’ அனுசரிப்பு

‘உலக பார்வை தினம் 2023’ அனுசரிப்பின் ஒரு பகுதியாக டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் அகர்வால்ஸ் பார்வை அளவியல் கல்வி நிறுவனம், கண் பராமரிப்பு மீது சிறப்பு கவனம் செலுத்தும் ஒரு தொண்டு நிறு வனமான இந்தியா விஷன் இன்ஸ்டிடியூட் (IVI) உடன் இணைந்து ஒரு தனித்துவமான நிகழ்வை அரங்கேற்றியது.

ஒரு ஜோடி கண் கண்ணாடிகள் வடிவ தோற்றத்தை மனிதர்களை கொண்டு உருவாக்கும் இந்த நேர்த்தியான முயற்சியில் 500 – க்கும் அதிகமான நபர்கள் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.

சென்னை மாநகரின் எலி யட்ஸ் கடற்கரையில், கண் கண்ணாடிகள் உருவத்தை மனிதர்களின் பங்கேற்புடன் உருவாக்கும் இம்முயற்சி, உலகில் எந்தவொரு இடத்தி லும் மிக அதிகமான நபர்களின் பங்களிப்போடு உருவாக்கப் பட்ட மிகப்பெரிய உருவ அமைப்புகளுள் ஒன்று என்ற பெருமைக்குரியது.

சென்னை கிழக்கு – ன் போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் சமாய் சிங் மீனா தலைமை விருந்தினராக பங்கேற்றார். கண்களை துணியால் கட் டிக்கொண்டு பங்கேற்ற ஒரு நடைப்பயிற்சியும் இந்நிகழ்வின் ஓர் அங்கமாக நடைபெற்றது.

லாரன்ஸ் – மேயோ கண் கண்ணாடியகம், இந்த முன்னெடுப்பு நிகழ்விற்கு ஆதர வளித்தது. குருட்டுத்தன்மை வராமல் தடுப்பதற்கான சர்வதேச முகமையின் ஆத ரவோடு நடத்தப்படும் ‘உலக பார்வைத் திறன் தினம்’, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை அன்று உல கெங்கிலும் அனுசரிக்கப்படுகிறது.

பணியமைவிடங்களில் கண்களது பார்வைத்திறன் ஆரோக்கியத்தை கவனமுடன் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ‘பணியில் உங்களது கண்களை நேசியுங்கள்’ என்ற கருத்தாக்கம் இந்தாண்டு உலக பார்வைத்திறன் தின அனு சரிப்பின் கருப்பொருளாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

டாக்டர் அகர்வால்ஸ் பார்வை அளவியல் கல்வி நிறுவனத்தின் டீன் டாக்டர் டி. கற்பகம், இந்தியா விஷன் இன்ஸ்டிடியூட் தலைமை செயலாக்க அதிகாரி வினோத் டேனியல், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் கருவிழி படலம் மற்றும் ஒளிக்கதிர் விலக்க அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் ரம்யா சம்பத் உள்ளிட்டோர் பேசினர்.

படிக்க வேண்டும்

spot_img