தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்க்கும் முகாம் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தலைமை தாங்கினார். துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி திலகராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்
நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பேசியதாவது: தூத்துக்குடி மாநகரத்தில் ஆன்லைன் மூலம் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இருந்தாலும் மக்களிடம் நேரடியாக சென்று மனுக்களை வாங்கி உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் விரைவாக பயனடைந்து வருகிறார்கள். தூத்துக்குடியில் 2000 புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
வடிகால் பணிகள் 95 சதவீதம் முடிக்கப் பட்டுள்ளது. ஐந்து சதவீதம் பணிகள் மட்டுமே உள்ளது. இந்த பணிகளும் விரைவில் முடிக்கப்படும். கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட முத்துநகர் பூங்கா ரோச் பூங்கா மேம்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வந்து செல்வதற்கு எல்லா வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் பீச் ரோட்டில் இருபுறமும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ள. மணல் குவியல்கள் அதிகமாக இருப்பதால் அதில் பேவர்ப்ளாக் ரோடுகள்அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் இந்த கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும்.
தற்போது தூத்துக்குடி நகர் முழுதும் நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது என்று புகார்கள் வந்துள்ளனர். மேலும் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களும் சேர்ந்து சுற்றுவதால் நாய்களை பிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு தூத்துக்குடி மாநகராட்சியில் ரெஜிஸ்டர் செய்து சான்றிதழ் வாங்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் சொத்து வரி நிர்ணயம், பெயர் மாற்றம், திருத்தங்கள், புதிய குடிநீர் இணைப்பு, தண்ணீர் கட்டண பெயர் மாற்றம், தண்ணீர் உபயோக கட்டண விகிதங்கள் மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பொதுச் சுகா தாரம், உரிமை ஆணை கட்டணங்கள், தொழில்வரி, பாதாள சாக்கடை, பிறப்பு இறப்பு சான்று மற்றும் திருத்தங்கள் உள்ளிட்ட மாநகராட்சி சேவைகள் குறித்து கோரிக்கை மனுக்களை மேயரிடம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாநகர அலுவலர் வினோத் ராஜா, நகரமைப்பு அலுவலர் ரங்கநாதன், துணை மாநகர பொறியாளர் சரவணன், கிழக்கு மண்டல ஆணையர் சொர்ணலதா, சுகாதார அலுவலர் ராஜசேகரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் ரெக்ஸ்லின் மரிய கீதா, ராமு அம்மாள், சரண்யா, ரீட்டா, ஆர்தர் மச்சாது, எடின்டா, மும்தாஜ், மகேஸ்வரி, தனலெட்சுமி சுரேஷ்குமார், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், திமுக வட்ட செயலாளர்கள் கதிரேசன், பொன்ராஜ், வட்ட பிரதிநிதி மாரியப்பன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.