டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா (CSI) மற்றும் ICT அகாடமியுடன் இணைந்து “ADVANCED COMPUTING SCIENCES (NCACS- 2K23)” என்னும் தலைப்பில் தேசிய கருத்தரங்கம் கல்லூரி கருத்தரங்க அறையில் நடந்தது.
கணினி அறிவியல் துறையின் புல முதன்மையர் முனைவர் எஃப்.மேரி மாக்டாலேனே ஜேன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் வி.ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசும்போது, பொது புதிய சந்தைகளில் திறந்திருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள் மற்றும் சுகாதாரம், கல்வி, ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற முக்கியமான பகுதிகளில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை எடுத்துரைத்தார். சிறப்பு செயற்கை நுண்ணறிவு துறையில் விரைவான முன்னேற்றத்தை நிபுணர்கள் முன்ன றிவிப்பதாக மேற்கோள் காட்டினார்.
சிறப்பு விருந்தினரை கணினி அறிவியல் துறை இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் முனைவர் பி ரோசிலின் ஜீதா அறிமுகம் செய்தார்.
கருத்தரங்க தொடக்க அமர்வுக்கு பாலகுமார் தனவேலு, இந்தியத் தலைவர் அவுட்ரீச், ஊழியர் தன்னார்வலத் தொண்டு (CSR), குளோபல் லீட்-ESG, காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் தலைமை தாங்கி, பேசும் போது, கம்ப்யூட்டிங் மற்றும் கம்யூனிகேஷன் டெக்னா லஜிகளின் சமீபத்திய போக்குகள் என்ற தலைப்பில் தொழில் வாழ்க்கையின் முக்கியத்துவம், எதிர் காலத்தில் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் தாக்கம் குறித்து மாணவர்களிடம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
கணினி அறிவியல் மற்றும் தகவல் தரவு பகுப்பாய்வு துறையின் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் (பொறுப்பு) முனைவர் வி.பிரேம் சுதா நன்றி கூறினார்.
தொழில்நுட்ப அமர்வு
தொழில்நுட்ப அமர்வில், கணினித் தொழில்நுட்பத் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் டி.மகேஸ்வரி வரவேற்றார். கணினி அறிவியல் துறையின் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் (பொறுப்பு) முனைவர் ஏ நிர்மலா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.
சென்னை சி-டாக் பிக் டேட்டா அனலிட்டிக்ஸ் குழுமத்தின் இணை இயக்குநர் டாக்டர்.விஜய் குமார் கண்ணன் தலைமை வகித்து பேசும்போது, திறந்த மூலக் கருவிகளைப் பயன்படுத்தி பிக் டேட்டா அனலிட்டிக்ஸின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
கணினி பயன்பாட்டியல் துறையின் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் முனைவர் ஆர்.கௌசல்யா வரவேற்றார், சிறப்பு விருந்தினர் அறிமுகத்தை செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் என்.குமரேஷ் வழங்கினார்.
ஆஸ்னெட் டெக்னாலஜிஸ், கோயமுத்தூர் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ரங்க ராஜகோபால் தலைமை தாங்கி பேசு கையில், வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள் மூலம் டிஜிட்டல் மாற்றம் குறித்து கருத்துகளை தெரிவித்தார்.
பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 1050 மானவர்களும், ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் ஆசிரியர்களும் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
சிறந்த படைப்புகளை அளித்த மானவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. டாக்டர்.என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி தகவல் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் (பொறுப்பு) முனைவர் ஏ.ஆதிசெல்வம் நன்றி கூறினார்.



