கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வடலூரில் நேற்று நடந்தது. தேர்தல் பணிக்குழு செயலாளர் இளபுகழேந்தி தலைமை தாங் கினார். செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா, இளைஞர் அணி துணை செயலாளர் அப்துல் மாலிக், இளைஞர் அணி சமூக வலைதள பயிற்சியாளர் இளமாறன் முன் னிலை வகித்தனர்.
அமைச்சரும் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசினார். கூட்டத்தில் வருகின்ற மார்ச் 1ம் தேதி முதல்வரும் ,கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள மாநகர, ஒன்றிய, நகர,பகுதி, பேரூர், 395 ஊராட்சி, 267 வார்டு என மொத்தம் 662 இடங்களில் கழக கொடியேற்றி சிறப்பாக கொண்டாட வேண்டும்.
கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வரும் 21, 22ம் தேதி வருகை தரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க கடலூர் கிழக்கு மாவட்ட மாநகர, ஒன்றிய, நகர பகுதி, பேரூர் நிர்வாகிகள் மற்றும் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டது.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ., துரை, கி.சரவணன், கடலூர் எம்.எல்.ஏ., ஐயப்பன், மேயர் சுந்தரி ராஜா, தொகுதி பார்வையாளர்கள் பாரிபாலன், சிவா, மாவட்ட துணை செயலாளர்கள் சக்தி வேல், சுதா சம்பத், ஒன்றிய செயலாளர்கள் முத்துசாமி, சிவக்குமார், நாராயணசாமி, தங்க.ஆனந்தன், முத்து பெருமாள், ராஜேந்திரன், சங்கர், சோழன், நடராஜன், கலையரசன் ராயர், மத்திய சுந்தர பாண்டியன், காசி ராஜன் சுப்பிரமணியன், தனஞ்செயன், மாநகர செயலாளர் ராஜா, அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் பழனி பகுதி செயலாளர்கள் நடராஜன், வெங்கடேஷ், எஸ்.சலீம், இளையராஜா, வடலூர் நகர செயலாளர் தமிழ்ச் செல்வன், வடலூர் நகர மன்றத் தலைவர் சிவக்குமார், வடலூர் நகராட்சி துணைத்தலைவர் சுப்புராயலு, குறிஞ்சிப்பாடி பேரூராட்சி தலைவர் கோகிலாகுமார், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி துணைத் தலைவர் ராமர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஞான சேகரன், விக்கிரமன், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலமுருகன், பாலு, வெற்றிவேல், கணேசன். கோதண் டபாணி, பேரூர் செயலாளர்கள் கணேசமூர்த்தி, ஜெய்சங்கர்,கந்தன், மனோகரன், செல்வகுமார். பழனி, கெங்கைகொண்டான்.
பேரூராட்சி தலைவர் பரிதா அப்பாஸ், மகளிர் அணி அமைப் பாளர், அமுதராணி, மகளிர் தொண்டரணி மனோ, ரஞ்சிதம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.