தருமபுரி மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.,யை சந்தித்து மாற்றுக் கட்சியினர் பாமகவில் இணைந்தனர்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி, காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கோவிலூர் ஊராட்சியை சார்ந்த திராவிட முன்னேற்றக் கழக அயலக அணி மாவட்டத் தலைவர் பாரதி தலைமையில் 25க்கும் மேற்பட்டோர் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸை சந்தித்து பாட்டாளி மக்கள் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர். தொடர்ந்து மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அனை வரையும் வரவேற்று வாழ்த்தினார்.
இந்நிகழ்வின் போது தருமபுரி சட்டமன்ற உறுப்பினரும், பாமக மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வெங்கடேஷ்வரன், மாநில இளைஞர் சங்க செயலாளர் எம்.முருகசாமி, மாநில அமைப்பு செயலாளர் ப.சண்முகம், மாவட்ட அமைப்பு செயலாளர் ஆ.அன்பழகன், மாவட்ட துணை தலைவர் நந்திசிவம், ஒன்றிய செயலாளர் குமரன், ஒன்றிய தலைவர் ஜிம்பாலன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.



