திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தை முதன்மை மாவட்ட நீதிபதி திறந்து வைத்தார்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகத்தில் குழந்தை களுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தும் சட்டம் 2012 கீழ் வழக்கு களின் பிரத்தியோக விசார ணைக்கான போக்சோ சிறப்பு நீதிமன்றத்தை முதன்மை மாவட்ட நீதிபதி சிவகடாட்சம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மேலும் முதன்மை மாவட்ட நீதிபதி சிவகடாட் சம் பேசும்பொழுது, குழந் தைகளுக்கான வாழ்வியல் குறை தீர்ப்பதற்காக போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. 2021-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 228 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது.
குற்றங்களை தனியாக விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி புதிய நீதிமன்றம் திறக்கப்பட் டுள்ளது. புதிய நீதிமன்றம் தனியாக அமைக்கப்பட் டதால் வழக்குகள் அனைத் தும் விரைவாக முடிக்க முடியும்` என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விசாகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ் கரன், திண்டுக்கல் மற்றும் மாவட்டத்தில் உள்ள நீதிபதிகள், வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள், நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண் டனர்.



