கோவை நேரு இன்ஸ்டிடியூட் ஆஃப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி வளாகத்தில், ரெடிமிக்ஸ் ரிசர்ச் இன்ஸ்டியூட் (PublicationMart.com) சார்பில் உருவாக்கப்பட்ட நவீன SaaS அடிப்படையிலான டிஜிட்டல் பப்ளிஷிங் தளம் PublicationMart.com அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப் பட்டது.
இந்த தொழில்நுட்ப தளத்தின் தொடக்க விழாவில், Rademics Research Institute நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் ரஞ்சித் மற்றும் நிர்வாக மேலாளர் திவ்யா ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டு தளத்தின் சிறப்பம்சங் களை அறிமுகப்படுத்தினர்.
PublicationMart.com மூலம், வெறும் 120 விநாடிகளில் ஒரு முழுமையான புத்தகத்தை உருவாக்க முடியும் என்பது முக்கியமான அம்சமாகும். இதில் புத்தக உள்ளடக்கம் மட்டுமல்லாமல், தலைப்பு பக்கம், வடிவமைப்பு உள்ளிட்ட அனைத்து வெளியீட்டு தேவைகளும் தானாக உருவாக்கப்படுகின்றன. இந்த தளத்தில் பல்வேறு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்பட் டுள்ளன, இதன் மூலம் ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர் கள் மிகக் குறைந்த நேரத்தில் தரமான நூல்களை வெளியிட முடிகிறது.
இந்த பப்ளிகேஷன் மார்ட் கல்வி மற்றும் ஆராய்ச்சி புத்தகங்கள், தொழில் முறை மற்றும் தொழில்நுட்ப நூல்கள், கல்வி பாடப்புத்தகங்கள், தொகுப்பு நூல் கள் மற்றும் புத்தக அத்தியாயங்கள் ஆகியவற்றை வெளியிட முழுமையான ஆதரவை வழங்குகிறது.
இந்த நிகழ்வில் டாக்டர் ரஞ்சித், “உயர்தரமான புத்தக வெளியீடு அனை வருக்கும் எளிதாகவும், குறைந்த செலவிலும் கிடைக்க வேண்டும் என்பதே இந்த மார்ட் டின் நோக்கம்” என தெரிவித்தார்.
மேலும் திவ்யா ரஞ்சித், “முதல் முறையாக எழுத தொடங்கும் ஆசிரியர்களிலிருந்து அனுபவமிக்க ஆராய்ச் சியாளர்கள் வரை முழுமையான பாட்னராக பப்ளிக்கேஷன் மார்ட் செயல்படும்” என கூறினார்.



