fbpx
Homeபிற செய்திகள்தர்மபுரி தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் பங்கு திருவிழா

தர்மபுரி தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் பங்கு திருவிழா

தர்மபுரி பாரதிபுரத்தில் உள்ள தூய இருதய ஆண்டவர் பேராலய பங்குத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடை பெற்றது. பின்னர் மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தப் பங்கு திருவிழா வருகிற 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவையொட்டி தினமும் தூய இருதய ஆண்டவர் தேர் பவனியும், சிறப்பு திருப்பலியும் நடக்கிறது.

வருகிற 16-ம் தேதி திருவிழா சிறப்பு திருப்பலியும், சிறப்பு தேர் பவணியும், நற்கருணை ஆசீர் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. வருகிற 17-ம் தேதி நன்றி திருப்பலியும், கொடி இறக்கும் விழாவும் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தைகள் மற்றும் பேராலய நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

படிக்க வேண்டும்

spot_img