fbpx
Homeபிற செய்திகள்பண்டைய கொங்கு நாட்டை நினைவு கூறும் கலை பண்பாட்டு மையம்

பண்டைய கொங்கு நாட்டை நினைவு கூறும் கலை பண்பாட்டு மையம்

பண்டைய கொங்கு நாட்டை நினைவு கூறும் கொங்கு நாட்டு கலை பண்பாட்டு ஆய்வு மையம் ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் செயல்படுகிறது.

கல்லூரி தாளாளர் தங்கவேல் முதல்வர் வாசுதேவன் கூறியதாவது:

பழங்காலத்தில் தமிழகம் சேர, சோழ, பாண்டிய, தொண்டை, கொங்குநாடு என பல்வேறு நாடுகளை கொண்டிருந்தது.  ஒவ்வொன்றும் பண்பாடு, மொழி உச்சரிப்பு , தொழில், சமூக அமைப்பில் மாறுபடுகின்றன. கொங்குநாடு தமிழகத்தின் ஏனைய பகுதிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. கொங்குநாடு பேரரசுகளால் ஆளப்படாத நிலப்பகுதியாகும்.   கொங்குநாடு உள்ளூர் அமைப்புகளால் பெரிதும் நிர்வாகம் செய்யப்பட்ட பகுதி. இன்றைய தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் வரை கொங்குநாடு இருந்துள்ளது. 

எனவே கொங்கு நாட்டை தனி ஒரு ஆய்வுக் களமாக கொண்டு தொடங்க பெற்று இன்றுவரை முன்மாதிரி ஆய்வு மையமாக திகழ்ந்து வருவது முனைவர் தே லூர்து அவர்களால் நாட்டுப்புறவியலுக்கான தொடங்கப்பட்ட பாளையங்கோட்டை தூய சேவரியர் கல்லூரியின் நாட்டார் வழக்கங்கள் ஆய்வு மையம். இந்த ஆய்வு மையத்தினை முன்மாதிரியாக கொண்டு இந்த ஆய்வு மையம் 

இக்கல்லூரியில் 2016 இல் துவக்கப்பட்டது. 

இம்மையத்தை நிர்வகிக்கும் கல்லூரி தமிழ் துறை தலைவர் தினகரன், உதவி பேராசிரியை உமாதேவி கூறியதாவது:

இம்மையத்தில் 600க்கும் மேற்பட்ட பண்டைய கொங்கு நாட்டின் விளையாட்டு,  நம்பிக்கை சார், சடங்கு சார், நேர்த்தி, 

மின்னணு மற்றும் வீட்டு புழங்கு பொருட்கள்,  அளவைகள், வேளாண் மற்றும் தொழிற்சார் கருவிகள், பண்டைய நாணயங்கள் தொல்பழங்கால பொருட்கள் ஓலைச்சுவடிகள்  என வரலாற்று சிறப்புமிக்க பொருட்கள் பல உள்ளன. இவைகள் மாணவ மாணவிகளால் மற்றும் பேராசிரியர்களால் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது இன்றைய மாணவ மாணவியர்களுக்கு பழங்கால கொங்கு நாட்டின் சிறப்பை விளக்கும். வருடந்தோறும் இது தொடர்பாக கருத்தரங்கம் நடைபெறுகிறது. மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு கிராமங்களுக்கு சென்று இது போன்ற பழைய கலைப் பொருட்களை சேகரித்து வருகின்றனர்.கொங்குநாடு சம்பந்தமாக ஆராய்ச்சிக்கு இது பெரிதும் உதவும்.

படிக்க வேண்டும்

spot_img