fbpx
Homeபிற செய்திகள்கோவை சிஎஸ்ஐ பிஷப் அப்பாசாமி கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

கோவை சிஎஸ்ஐ பிஷப் அப்பாசாமி கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

கோவை ரேஸ் கோர்ஸ் சிஎஸ்ஐ பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை ரேஸ்கோர்ஸ் இல் உள்ள சிஎஸ்ஐ பிஷப் அப்பாசாமி கலை அறி வியல் கல்லூரியில் 1995 முதல் 2023 வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் கல்லூரி செயலாளர் அருள்திரு ஆயர் டேவிட் பர்ணபாஸ், கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெமிமா வின்ஸ்டன், துணை முதல்வர் பால் சுதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

விழாவில் வெளிநாடு மற்றும் வெளிமாநி லங்களில் இருந்தும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த முன்னாள் மாணவர்கள் 600 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் முன்னாள் மாணவர்கள் பலர் தாங்கள் பயின்ற இந்த கல்லூரியின் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண் டனர். அதை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில் ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் எக்சன் நிர்மல், எட்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img