வ.உ.சி சிதம்பரனாரின் 152 வது பிறந்தநாளை ஒட்டி கோவை வ.உ.சி மைதானத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் முத்துச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 152 வது பிறந்தநாளை ஒட்டி கோவை வ உசி மைதானத்தில் அமைந் துள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து கோவை மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள வ உ சியின் திருவுருவ சிலை மற்றும் அவர் சிறையில் இழுத்த செக்கு ஆகியவற்றிற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகர மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணைமேயர் வெற்றிச்செல்வன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமு த்தூர் ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், முன்னாள் எம்பி நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.