தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரி யத்தின் சார்பில் கோவை மாவட்டத்தில் பயனாளிகளுக்கு வீடு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தின் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் உறுப்பினர் களாக உள்ளவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தை யொட்டி நேற்று கோவை மாவட்டத்தில் 7 பேருக்கு கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வீட்டிற்கான ஆணையை வழங்கினார்.
இதில் கிருஷ்ணவேணி, கண்ணம்மாள், கணேசன், கனகா, தமிழ்ச்செல்வி, அனனம்மாள், துளசி மணி ஆகியோர் ஆணையை பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியதுணைத் தலைவர் கனிமொழி பத்ம நாபன், கோவை மாவட்ட தாட்கோபொதுமேலாளர் ரஞ்சித் , மாநில உறுப்பினர் ஆர்.பி.மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.