கோவை வடக கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி இல்ல திருமண நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்கள், பிரபாகரன் – இந்துஜா ஆகியோரை வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.
மணமக்களை வாழ்த்தி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்பேசியதாவது:
ஒட்டுமொத்த தமிழக மகளிர் அனைவரும் தற்போது முதலமைச்சரை வாழ்த்தி வருகின்றனர். அது உங்களுக்கும் தெரியும். ஆயிரம் ரூபாய் கிடைக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அதனால் மகளீர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நூறு வருடத்துக்கு முன்பாக பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாது. அதை உடைத்து தற்போது மாற்றம் செய்தது தான் திராவிட மாடல் ஆட்சி.
ஆட்சி அமைந்து முதல் கையெழுத்து மகளிருக்கு கட்டணம் இல்லாமல் பேருந்தில் செல்ல அனுமதி, மகளிர் ஊக்கத்தொகை வழங்கும் விழாவுக்கு முன்பாகவே மகளிருக்கு ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டது, அனைத்து பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிமுக வில், பல அணிகள் இருக்கின்றது.
ஓபிஎஸ் அணி, இ பி எஸ் அணி, தீபா அணி, தீபாவின் டிரைவர் அணி, இன்று கூட
நான் தான் அதிமுக என்று ஒருவர் கிளம்பியுள்ளார். அதிமுகவில் மற்றொரு அணி உள்ளது. அது பாஜக அணி.
நமது இந்தியா கூட்டணி போல வெற்றி கூட்டணியாக மணமக்கள் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த திருமண வர வேற்பு நிகழ்ச்சியில், கழக துணைப்பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்பி, அமைச்சர்கள் மகேஷ் பொய்யாமொழி, கோவை பொறுப்பு அமைச்சர் முத்துச்சாமி, செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன், போக்குவரத்து துறை அமைச்சர்
சங்கர், அமைச்சர் கயல்விழி செல்வராஜ், முன்னாள் மத்திய அமைச்சர் மு.கண்ணப்பன், திமுக மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தளபதி முருகேசன் , மேயர் கல்பனா ஆனந்தகுமார், முன்னாள் எம்பி நாகராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.