கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு, நாளையும் (18ம் தேதி), நாளை மறு தினமும் (19ம் தேதி) பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்படாத வகையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கோவை மாநகரில், மேற்குறிப்பிட்ட பகுதிகளில் 18ம் தேதி மதியம் 1 மணி முதல் இரவு 10 மணி வரை, 19ம் தேதி காலை 6 மணிமுதல் 10 மணிவரை கீழக்கண்டவாறு சிறியளவில் போக்குவரத்துல் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டள்ளது.
1.கனரக/சரக்கு வாகனங்கள்
1)அவிநாசியிலிருந்து, கோவை நகருக்குள், நீலாம்பூர், சின்னியம் பாளையம் வழியாக வரும் கனரக/சரக்கு வாகனங்கள் தடை செய்யப்படுகிறது.
மாற்றாக, கோவை நகருக்குள் வரும் கனரக/சரக்கு வாகனங்கள் எல் அண்ட் டி பைபாஸ் ரோடு, சிந்தாமணிபுதூர், ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர், ராமநாதபுரம் வழியாக நகருக்குள் வரலாம்.
2) கோவை நகரிலிருந்து, அவிநாசிக்கு செல்லும் கனரக/சரக்கு வாகனங்கள் அண்ணா சிலை, ரேஸ்கோர்ஸ், சுங்கம், சிங்காநல்லூர், எல் அண்ட டி பைபாஸ்ரோடு வழியாக செல்லலாம்.
3) காளப்பட்டி ரோடு வழியாக, நகருக்கு வெளியே செல்லும் கனரக/சரக்கு வாகனங்கள், விமான நிலைய சந்திப்பை அடைய தடை செய்யப்படுகிறது.
மாற்றாக, காளப்பட்டி நால்ரோடு, மயிலம்பட்டி, தொட்டிபாளையம் வழியாக செல்லலாம்.
4) சத்திரோடு, சரவணம்பட்டி பகுதிகளிலிந்து அவிநாசி சாலை / திருச்சி சாலைக்கு செல்லும் கனரக/ சரக்கு வாகனங்கள் கணபதி, காந்திபுரம் மேம்பாலம், அண்ணாசிலை, ரேஸ்கோர்ஸ், சுங்கம், சிங்காநல்லூர் வழியாக செல்லலாம்.
5) மருதமலை ரோடு, தடாகம் ரோடு-வழியாக வரும் வாகனங்கள் கௌலிபிரவுன் ரோடு, சிந்தாமணி வழியாக செல்வது தடை செய்யப்படுகிறது.
மாற்றாக, ஜிசிடி, பாரதி பார்க் சாலை, வடகோவை மேம்பாலம், காந்திபுரம், அண்ணாசிலை, ரேஸ்கோர்ஸ், சுங்கம், சிங்காநல்லூர் வழியாக செல்லலாம்.
6) மேட்டுப்பாளையம் ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள், வடகோவை மேம்பாலம், காந்திபுரம், அண்ணாசிலை, ரேஸ்கோர்ஸ், சுங்கம், சிங்காநல்லூர் வழியாக செல்லலாம்.
கார்/ இதர வாகனங்கள்
1) பொதுமக்கள், கோவை நகருக்குள் அவிநாசி சாலை, பழைய மேம்பாலம், கூட் ஷெட் ரோடு, புரூக்பீல்டு ரோடு, சிந்தாமணி சந்திப்பு, கௌலிபிரவுன் ரோடு, லாலிரோடு மற்றும் மருதமலை ரோடு ஆகிய பகுதிகளில், மேற்குறிப்பிட்ட நேரங்களில் செல்ல வேண்டியிருந்தால், தங்களது பயணத்தை மாற்றி திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
2) அவிநாசி சாலை, சின்னியம்பாளையம் வழியாக, கோவை நகருக்குள் வரும் கார்/ இதர வாகனங்கள், தொட்டிபாளையம் பிரிவு, மயிலம்பட்டி, காளப்பட்டி நால்ரோடு, சரவணம்பட்டி வழியாக செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விமானநிலையம், ரயில்நிலையம், மருத்துவமனைகளுக்கு செல்லும் வாகனங்கள் மட்டுமே தொட்டிபாளையம் பிரிவிலிருந்து நகருக்குள் அனுமதிக்கப்படும்.
3) திருச்சி சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், அவிநாசி சாலையை தவிர்த்து, சிங்காநல்லூர் வழியாக தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.
4) அவிநாசி ரோடு, பழைய மேம்பாலத்தை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மேற்குறிப்பிட்ட நேரங்களில், மேம்பாலத்தின் கீழே செல்லுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது.
5) மருதமலை ரோடு, தடாகம் ரோடு – வழியாக வரும் வாகனங்கள் ஜிசிடி, பாரதி பார்க் சாலை, வடகோவை மேம்பாலம், காந்திபுரம் வழியாக செல்லலாம்.
6) மேட்டுப்பாளையம் ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் வடகோவை மேம்பாலம், காந்திபுரம் வழியாக செல்லலாம்.
இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு ஏற்ப, பொதுமக்கள் தங்களது பயணத்தை திட்டமிட்டு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறோம்.
மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.