fbpx
Homeபிற செய்திகள்கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா

கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா

கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியின் வருடாந்திர விளையாட்டு விழா நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினர்களுக்கு தேசிய மாணவர் படை மாணவர்களும் அணித்தலைவர்களும் அணி வகுப்பு மரியாதை செலுத்தி வர வேற்றனர்.

இறைவழிபாட்டை மாணவர் நிர்மல் நிகழ்த்தினார். பள்ளியின் முதல்வர் செலின் வினோதினி வரவேற்றுப் பேசி சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.

பள்ளியின் கொடியை சிறப்பு விருந்தினர் மருத்துவர் ஜெயக்குமார் ஏற்றி வைத்து விளையாட்டு ஜோதியை ஏற்றிவைத்தார். விழாவில் பள்ளியின் தாளாளர் பிலிப் ஆர்.ஜே.பவுலர், பொருளாளர் ஜேம்ஸ் ஞானதாஸ் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

விழாவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் துணை முதல்வர் பிரியா சீன் ஒருங்கிணைத்து நடத்தினார். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந் தினர் மருத்தவர் ஜெயக்குமார் பரிசுகளையும் பதக்கங்களையும் வழங்கி உரையாற்றினார்.

அதிக வெற்றிகளை பெற்ற மைக்கான கோப்பை பேந்தர்ஸ் (கரும்புலி) அணிக்கு கிடைத்தது. சிறந்த அணிவகுப்பு நடத்தியதற்காக லைன்ஸ் (அரிமா) அணி கோப்பையை வென்றது.

ஏ பிரிவின் ஒட்டுமொத்த வெற்றியாளர்களுக்கான கோப்பையை மாணவர் பிரிவில் ஜோயல் ஆண்டர்சன் (வகுப்பு-12 லைன்ஸ்), மாணவியர் பிரிவில் மேகா.எஸ்.கே. (வகுப்பு &11 லைன்ஸ்) ஆகியோரும் பெற்றனர்.

பி பிரிவில் அணியின் ஒட்டுமொத்த வெற்றியாளர்க ளுக்கான கோப் பையை மாணவர் பிரிவில் ஸ்ரீ அஸ்வத் (வகுப்பு-10 பேந்தர்ஸ்), மாணவியர் பிரிவில் ஸ்ரேயா (வகுப்பு -9 பேந்தர்ஸ்) ஆகி யோரும் பெற்றனர்.

சி பிரிவில் அணியின் ஒட்டுமொத்த வெற்றியாளர்களுக் கான கோப்பையை மாணவர் பிரிவில் ஆகாஷ் (வகுப்பு -8 உல்ஃப்), மாணவியர் பிரிவில் பிரக்துஷா(வகுப்பு-8 பேந்தர்ஸ்) ஆகியோரும் பெற்றனர்.

டி பிரிவில் அணியின் ஒட்டுமொத்த வெற்றியாளர்களுக்கான கோப்பையை மாணவர் பிரிவில் பிரகதீஸ் (வகுப்பு-6 பேந்தர்ஸ்). மாணவியர் பிரிவில் தமிழினி (வகுப்பு-6 டைகர்ஸ்) ஆகியோரும் பெற்றனர்.

வெற்றிக்கு கிளேட்டன் தலைமையிலான உடற்கல்வி ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்தனர். இந்நிகழ்வில் ஸ்டேன்ஸ் சகோதரப் பள்ளிகளின் முதல் வர்கள், பெற்றோர்கள் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.
முடிவில் உடற்கல்வி இயக்குநர் கிளேட்டன் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img