மாநில அளவிலான தாங்டா & குராஷ் போட்டிகள் திருநெல்வேலி எஸ்.ஏ.வி.பாலகிருஷ்ணா சிபிஎஸ்இ பள்ளியில் இரு நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் சார்பில் பங்கேற்ற நேத்ரா ஸ்ரீ (விசிவி சிசு வித்யோதயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி), ஜாக்குலின் நேத்ரா (அல்வேர்னியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி), ரூபேஷ் குமார் (இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி), அபிஜித் (கேஜிஎம்எஸ் மெட்ரிக் பள்ளி) நிதர்ஷனா (அரசு உயர்நிலைப்பள்ளி காந்திமாநகர்), சிவாணி (கோபால் நாயுடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி), நிக்கிலேஷ் (ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி) ஆகியோர் தேசிய அளவிலான தாங்டா போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.
இதேபோல ஜெஸ்லின் (செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி), மேரிபிரியதர்ஷினி (பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி) ஆகியோர் (குராஷ்) தேசியப் போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.
தேர்வு பெற்றவர்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் வாழ்த்தினர்.