fbpx
Homeபிற செய்திகள்ஏபிஎல் அப்போலோ ஸ்டீல் குழாய் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக அமிதாப்பச்சன் நியமனம்

ஏபிஎல் அப்போலோ ஸ்டீல் குழாய் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக அமிதாப்பச்சன் நியமனம்

ஏபிஎல் அப்போலோ ஸ்டீல் குழாய் நிறுவனம் தனது பிராண்ட் அடையாளத்தை நாடு முழுவதும் வலுப்படுத்தும் விதமாக பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச் சனை விளம்பர தூதுவராக நியமித்துள்ளது.

30 ஆண்டுகால பாரம்பரியமிக்க ஏபிஎல் அப்போலோ ஸ்டீல் குழாய் நிறுவனம் அதன் சந்தை ஆதிக்கத்தை மேலும் உயர்த்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
அதன் பிராண்ட் அங்கீகாரத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தி வருகிறது.

இதற்காக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அனைத்து ஊடக தளங்களிலும் 2 வருடம் விளம்பரத்தூதுவராக செயல்பட ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்து ஏபிஎல் அப்போலோ டியூப்ஸ் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சஞ்சய் குப்தா கூறியதாவது:

ஏபிஎல் அப்போலோ-வின் சிறப்பம்சங்கள் பல்துறை திறன், காலமற்ற திறன் ஆகியவற்றை குறிக்கிறது. அமிதாப்பச்சனை விளம்பர தூதுவராக வரவேற்பதில் பெருமையடைகிறோம். இந்த பார்ட்னர்ஷிப் இந்திய சந்தையில் எங்களது இருப்பை வலுப்படுத்த உதவும் என நம்புகிறோம்.

அமிதாப்பச்சன் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் மில்லியன் கணக்கான இத யங்களை வெற்றி கொண்டுள்ளார். இது எங்களது பிராண்ட இமேஜை எல்லா இடங்களிலும் உயர்த்தும் என் றார்.

படிக்க வேண்டும்

spot_img