கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் ஜி.20 இளம் தூதுவர்கள் உச்சி மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன், இந்தியாவின் ஜி20 ஷெர்பா அமிதாப் காந்த் ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டை துவக்கி வைத்தனர்.
இந்த மாநாட்டில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தை பயன்படுத் துபவர்களுக்கான கூட்டு கல்வி முறை என்ற தலைப்பிலும், பெண்களுக்கான அதிகாரம் மற்றும் தொழில் முனைவு என்ற தலைப்பிலும் இளம் தூதுவர்கள் கலந்துரையாடினர்.
இதனைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:
நாம் அனைவரும் கலாச்சாரத்திலும், பண்பாடிலும், இலக்கியங்க ளிலும் பல ஆயிரம் ஆண்டுகளாக சிறப்பாகத் திகழ்ந்து விளங்கும் மாநிலத்தில் இருக்கிறோம். இந்த கல்லூரி மாணவர்களுக்கு இளைஞர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு புதிய புதிய முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு, தமிழ் மக்கள், தமிழ் கலாச்சாரம் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.குறிப்பாக திருவள்ளுவரின் திருக்குறள் என்பது மக்களுக்கு, பல்வேறு கலாச்சாரங்களை கற்று கொடுக்கிறது. அதேபோல் சிலப்பதிகாரம், மணிமேகலை தொல்காப்பியம், புறநானூறு போல இலக்கியங்களும் நமது கலாசாரங்களை எடுத்துகூறுகிறது.
இயற்கை, மனித மோதல் நடந்துவருகிறது. இதனால் தாய் பூமி வெப்பமயமாகி வருகிறது.நதிகள் வறண்டு, வனங்கள் காய்ந்து என பல்வேறு மோதல்கள் மனிதனுக்கும் இயற்கைக்குமான போர் நடந்து வருகிறது. பல நாடுகள் உலகை அழிக் கும் வகையிலான ஆயுதங்களை தயாரித்து வருகிறது.
புதிய புதிய எலக்ட்ரானிக் உபகரணங்களால் மனிதர்கள் தற்கொலை, மன அழுத்தம் உள்ளிட்டவை அதிகரித்துள்ளன. குறிப்பாக மன உளைச்சல் அதிகளவில் காணப்படுகிறது. நாம் நினைத்து பார்க்க வேண்டும் எப்படி அமைதியான ஆரோக்கியமான உலகை உருவாக்க வேண்டும் என்பதே.
கொரோனா காலத்தில் தடுப்பூசிக்காக உலக நாடுகள் திண் டாடி வந்த நிலையில், இந்தியா தடுப்பூசிகளை தயாரித்து அதனை உலக நாடுகளுக்கும் இலவசமாக கொடுத்தது. நம்மிடம் உள்ளதை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளும் பழக்கம் நமது மரபணுவிலேயே உள்ளது. அதுதான் இந்தியா, அதுவே நமது எண்ணம்.
இவ்வாறு ஆளுநர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமங்களின் தலைவர் மலர்விழி, அறங்காவலர் ஆதித்யா, நடிகை கவுதமி, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.



