கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் சென்னை வாழ் முன்னாள் மாணவியருக்கான சந்திப்பு நடைபெற்றது. இவ் விழாவில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் எஸ்.நரேந்திரன் தலை மையுரை ஆற்றினார்.
கல்லூரிக்கும் மாணவிகளுக்கும் இடையிலான ஆழமான பிணைப்பைப் பற்றிக் கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா பகிர்ந்து கொண்டு, கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளுக்குப் பலவிதங்களிலும் முன்னாள் மாணவிகள் உதவி வருவதைப் பற்றிக் கூறி மகிழ்ந்தார்.
தற்போது வெவ்வேறு பதவிகளில், பொறுப்புகளில் உள்ள மாணவிகள், தங்களுடைய மகிழ்ச்சிகரமான கல்லூரி வாழ்க்கையை நினைவு கூர்ந்தபோது மறுபடியும் கல்லூரி வாழ்க்கைக்கே திரும்பிச்சென்ற உணர்வுமயமான தருணமாக அமைந்தது என நிகழ்வை குறிப்பிட்டனர்.



