கோவை, கவுண்டம்பாளையம் கல்பனா திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு கைத்தறி துறை மற்றும் மத்திய அரசு ஜவுளி துறை கைத்தறி வளர்ச்சி ஆணையம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கணகாட்சியினை மாவட்ட கலெக்டர் சமீரன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
அருகில் துணை இயக்குநர் டெக்ஸ்டைல் கமிட்டி வேணுகோபால், நெசவாளர் சேவை மைய துணை இயக்குநர் கார்த்திகேன், தேசிய கைத்தறி வளர்ச்சி கழகம் மேலாளர் ரத்தினவேல், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் குமரேசன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை, உதவி இயக்குநர் சிவக்குமார், பட்டுவளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அப்துல் பார்க் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.