கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 3க்குட்பட்ட சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகரில் உள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் WIND POWER PVT LTD COIMBATORE நிறுவனத்தின் முழு பங்களிப்புடன் ரூ.47.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மூன்று கூடுதல் வகுப்பறைகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாணவ, மாணவிகள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
உடன் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், மாமன்ற உறுப்பினர் கவிதா, மண்டல சுகாதார அலுவலர் இராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் உத்தமன், பள்ளி தலைமையாசிரியர் ஸ்டெல்லா தேவி, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஆகியோர் உள்ளனர்.



