fbpx
Homeபிற செய்திகள்கோவை சம்ஹிதா அகாடமி பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை சம்ஹிதா அகாடமி பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை அருகே சம்ஹிதா அகாடமி பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது.

கோவை மலுமிச்சம் பட்டி தி சம்ஹிதா அகாடமி பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சி, ‘வசு தைவ குடும்பம்‘ என்ற தலைப்பில் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
பள்ளி முதல்வர் .புஷ்பஜா கண்ணதாசன் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், சம்ஹிதா அறக் கட்டளையின் அறங் காவலரும், இயக்குநருமான .ஆஷா தாமஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்திய ஒற்றுமையை எடுத்து கூறும் விதமாக உலகில் உள்ள அனைவரும் ஒரே குடும்பம் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவின் பன்முக தன்மையை எடுத்து கூறும் விதமாக மாணவ, மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள் பார்வை யாளர்களை வெகுவாக கவர்ந்தன.

குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா என இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் மாணவ, மாணவிகளின் நடனங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

முன்னதாக தி சம்ஹிதா அகாடமி பள்ளியின் செயல்பாடு குறித்து பேசிய பள்ளியின் முதல்வர் புஷ்பஜா கண்ணதாசன், எங்களது பள்ளியில் மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் கல்வி, விளையாட்டு, அறிவி யல் என அனைத்து திறன்களையும் ஊக்குவித்து வரு வதாக தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img