fbpx
Homeபிற செய்திகள்கோவை ராயல் கேர் மருத்துவமனை சார்பில் தலைக்காயம் குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான்: காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்...

கோவை ராயல் கேர் மருத்துவமனை சார்பில் தலைக்காயம் குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான்: காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கினார்

பெரும்பாலான தலைக்காயங் கள் சாலை விபத்துகளாலேயே ஏற்படுவதாக, புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. குறிப்பாக, ஆண்டுதோறும் உலக அளவில் 10 முதல் 12 சதவீத மக்கள் தலையில் காயம் ஏற்படுவதால் இறக்கின்றனர்.

இந்நிலையில் இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் விதமாக கோவை ராயல்கேர் மருத் துவமனை சார்பாக தலைக்காயம் குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.

ராயல்கேர் மருத்துவமனையின் தலைவர், மருத்துவர் மாதேஸ்வரன் தலை மையில் நடைபெற்ற வாக்கத்தானை கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், தற்போது அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் வாகன எண்ணிக்கைக்கு ஏற்றபடி பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடித்தாலே பெரும்பான்மையான விபத்துக்களை தவிர்க்க இயலும் என கூறினார்.

தொடர்ந்து பேசிய மருத்துவர் மாதேஸ்வரன் சாலை பாதுகாப்பில் பொதுமக்களும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ,குறிப்பாக பொதுமக்கள் மன அழுத்தங்கள் இல்லாமல் வாகனங்களை இயக்க வேண்டும் என தெரிவித்தார்.

முன்னதாக நடைபெற்ற வாக்கத்தான் துவக்க நிகழ்ச்சியில் ராயல் கேர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு துறை தலைவர் மருத்துவர் சிவக்குமார்,மருத்துவ இயக்குனர் பரந்தாமன் சேதுபதி தலைமை செயல் அதிகாரி வாசுதேவன்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவை ரேஸ் கார்ஸ் சாலையில் துவங்கிய வாக்கத்தான் பிரதான சாலை வழியாக நஞ்சப்பா சாலை ரயல்கேர் மருத்துவமனையை வந்தடைந்தது. இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சாலை விபத்து

கோவை, ஏப். 1 பெரும்பாலான தலைக்காயங்கள் சாலை விபத்துகளாலேயே ஏற்படுவதாக, புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. குறிப்பாக, ஆண்டுதோறும் உலக அளவில் 10 முதல் 12 சதவீத மக்கள் தலையில் காயம் ஏற்படுவதால் இறக்கின்றனர்.

இந்நிலையில் இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் விதமாக கோவை ராயல்கேர் மருத் துவமனை சார்பாக தலைக்காயம் குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.

ராயல்கேர் மருத்துவமனையின் தலைவர், மருத்துவர் மாதேஸ்வரன் தலை மையில் நடைபெற்ற வாக்கத்தானை கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், தற்போது அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் வாகன எண்ணிக்கைக்கு ஏற்றபடி பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடித்தாலே பெரும்பான்மையான விபத்துக்களை தவிர்க்க இயலும் என கூறினார்.

தொடர்ந்து பேசிய மருத்துவர் மாதேஸ்வரன் சாலை பாதுகாப்பில் பொதுமக்களும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ,குறிப்பாக பொதுமக்கள் மன அழுத்தங்கள் இல்லாமல் வாகனங்களை இயக்க வேண்டும் என தெரிவித்தார்.

முன்னதாக நடைபெற்ற வாக்கத்தான் துவக்க நிகழ்ச்சியில் ராயல் கேர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு துறை தலைவர் மருத்துவர் சிவக்குமார்,மருத்துவ இயக்குனர் பரந்தாமன் சேதுபதி தலைமை செயல் அதிகாரி வாசுதேவன்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவை ரேஸ் கார்ஸ் சாலையில் துவங்கிய வாக்கத்தான் பிரதான சாலை வழியாக நஞ்சப்பா சாலை ரயல்கேர் மருத்துவமனையை வந்தடைந்தது. இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img