கோவை செல்வபுரம் வாசவி வித்யாலயா பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பல் பராமரிப்பு மற்றும் நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை ரோட்டரி கிளப் இன்ட்டஸ்ட்ரியல் சிட்டி ஆர்.ஐ.3201 சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பல் பராமரிப்பு விழிப்புணர்வு முகாமில் டாக்டர் உமா பிரபு கலந்துகொண்டு மாணவ மாணவிகள் மத்தியில் பல் பராமரிப்பது பற்றியும், பல்நோய் வராமல் தடுப்பது எப்படி என்பது குறித்தும் விளக்கி பேசினார்.
கோவை ரோட்டரி சங்கம், இன்னர்வீல் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அதன் நிர்வாகிகள் கனகராஜ், வழக்கறிஞர் பிரபுசங்கர், மாதுரு மத்மா ராணி, வீனாபதி, மீரா ரகுநாதன், பிரசன்னா ஜெயந்தி, பள்ளி தாளாளர் விஜயகுமார், முதல்வர் பிரேமாலதா, மற்றும் சரவணன், ராஜசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.