fbpx
Homeபிற செய்திகள்கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக குழந்தை குறைமாத விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக குழந்தை குறைமாத விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக குழந்தை குறைமாத விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. குறைமாத குழந்தைகளை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் பராமரிக்க இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு (என்ஐசியு) குழந்தைகளுக்கு சிறந்த சிகிச்சை வழங்குவதற்காக பிரத்யேகமாக நிறுவப்பட்டது. இங்கு குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் துல்லியமாகவும், மிகுந்த கவனத்துடனும் பராமரிக்கப்படுகிறார்கள்.

உலக குழந்தை குறைமாத விழிப்புணர்வு நிகழ்ச்சியில் குழந்தைகளின் பெற்றோர், என்ஐசியு பிரிவு செவிலியர்கள், மருத்துவர்களுக்கு, குழந்தைகளின் பாதுகாப்பு, ஆரோக்கியத்தை பேணும் வழிமுறைகள் குறித்து மருத்துவர் சித்தார்த்தா சித்தவரப்பு எடுத்து கூறினார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் பச்சிளம் குழந்தைகளுக்கு தேவையான குளிரூட்டும் சிகிச்சை (கூலிங் தெரப்பி), உயர் அதிர்வெண் காற்றோட்டம், நைட்ரிக் ஆக்ஸைடு சிகிச்சை போன்ற உயர்நிலை சிகிச்சைகளுக்கான வசதிகளை கொண்டுள்ளது.

மேலும் சிறப்பம்சமாக ஏழு நாள்களும் 24 மணி நேரமும் செயல்படும் தாய்ப்பால் வங்கி இம்மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பிசியோதெரபி, பேச்சு பயிற்சி, உளவியல் மதிப்பீடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய சிறப்பு மையம் விரைவில் நிறுவப்படும் என மருத்துவர் சுஜா மரியம் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img