fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் நிதி தொழில்நுட்ப பன்னாட்டு கருத்தரங்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் நிதி தொழில்நுட்ப பன்னாட்டு கருத்தரங்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில், மலேசியாவின் குவெஸ்ட் பன்னாட்டுப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, நிதி தொழில்நுட்ப பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் கி.சித்ரா தலைமை வகித்தார். குவெஸ்ட் பல்கலைக்கழக கணக்கியல், நிதிசார் கல்வித்துறை தலைவர் தனராஜ் கிருஷ்ணா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், “நிதி தொழில்நுட்பத்தின் அதி தீவிர வளர்ச்சியானது உலகில் நேர்மறையான தாக்கத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

கருத்தரங்கில் அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் உள்ள டிஸ்கவுண்ட் டயர் நிறுவன துணை மேலாளர் திவ்யா கனகராஜ், எச்டிஎப்சி வங்கியின் சென்னை கிளை ரீடைல் கிரெடிட் மேலாளர் சாதனா வைத்தியநாதன் ஆகியோர் நிதி தொழில்நுட்பம் குறித்து உரையாற்றினர்.

தொடர்ந்து இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்து நேரடியாகவும் இணைய வழியிலும் கல்வியாளர்கள், ஆய்வறிஞர்கள், மாணவர்கள் உள்பட 120 பேர் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். சிறந்த ஆய்வுக்கட்டுரைகளுக்குப் பரிசு வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img