கோவை மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியார் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் பழுதடைந்த நிலையிலுள்ள வீடுகள் புதியதாக கட்டப் பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி செய்தியாளர் யணத்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர் களிடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித் தருவது உள்பட பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்
‘இலங்கை அகதிகள் முகாம்’ என்பதை ‘இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்’ என முதல்வர் பெயர் மாற்றினார். இலங்கை அகதிகளின் நல னுக்காக தமிழ்நாடு அரசு தனியே ஒரு குழுவை உருவாக்கி செயல்பட்டு வருகிறது.
முதல்வர் சட்டமன்ற பேரவை விதி எண் 110-கீழ் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகளை புதிதாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக நடப்பு நிதி ஆண்டில் 300 சதுர அடி கொண்ட 4 வீடுகள் கொண்ட தொகுப்பு வீடாக கட்டுவதற்கு வீடு ஒன்றுக்கு ரூ.5 லட்சம் மற்றும் தனி வீடுகள் கட்டுவதற்கு வீடு ஒன்றுக்கு ரூ.5.65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார்.
இத்திட்டம் ஊரக வளர்ச்சி – ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக செயல் படுத்தப்படுகிறது.
கோவை மாவட்டத்திலுள்ள மேட் டுப்பாளையம் வேடர் காலனி, பேரூர் பூலுவபட்டி, கோட்டூர் ஆழியார் ஆகிய 4 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 1059 குடும்பங்களை சேர்ந்த 3,002 மக்கள் வசித்து வருகின்றனர்.
ஆனைமலை வட்டாரத்திற்குட்பட்ட கோட்டூர் பேரூராட்சியில் அமைந்துள்ள ஆழியார் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 4 வீடுகள் கொண்ட தொகுப்பு வீடுகள் தலா ரூ.5 லட்சம் வீதம் 317 வீடுகள் மற்றும் கோட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 4 வீடுகள் கொண்ட தொகுப்பு வீடுகள் தலா ரூ.5 லட்சம் வீதம் 112 வீடுகள் என மொத்தம் 429 வீடுகள் ரூ.21.40 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வருகின்றன.
ஆழியார் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.5.65 லட்சம் மதிப்பீட்டில் ஒரு தனி வீடும் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்தார்.
ஆய்வின்போது கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) டாக்டர் அலர்மேல்மங்கை, பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.