fbpx
Homeபிற செய்திகள்எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயத்தில் புதிய பட்டய வகுப்புகள் அறிமுகம்

எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயத்தில் புதிய பட்டய வகுப்புகள் அறிமுகம்

எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயம் தமிழ் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தமிழில் வழிபாடு செய்ய பயிற்சித் தரும் “அருட்சுனைஞர்” உள்ளிட்ட சில சான்றிதழ் வகுப்புகளையும் நடத்தி வருகிறது. தற்போது புதிதாக 2 பட்டய வகுப்புகளையும், 2 சான்றிதழ் வகுப்புகளையும் வரும் கல்வியாண்டு முதல் நடத்தவிருக்கிறது.

“திருமூலர் ஆய்விருக்கை

சென்னை தரமணியில் உள்ள “திருமூலர் ஆய்விருக்கை” என்ற அறக்கட்டளையுடன் இணைந்து “வள்ளலாரும் வாழ்வியலும்” என்ற பொருளில் பட்டய வகுப்பு மற்றும் சான்றிதழ் வகுப்பை நடத்தவிருப்பதோடு, “திருமந்திரமும் வாழ்வியலும்” என்ற பொருளில் பட்டய வகுப்பு மற்றும் சான்றிதழ் வகுப்பையும் நடத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் சு. பொன்னுசாமி முன்னிலையில் நடைபெற்றது.

தமிழ்ப்பேராயத் தலைவர் முனைவர் கரு. நாகராசன், “திருமூலர் ஆய்விருக்கை” பொறுப்பாளர் முனைவர் மகாலட்சுமி மற்றும் தமிழ்ப்பேராய உதவிப் பேராசிரியர்கள் மு. பாலசுப்பிரமணி, முனைவர் ஜெகத்ரட்சகன், சுதன் ஆகியோருடன் ஆய்விருக்கைப் பொறுப்பாளர் மோகனும் பங்கேற்றார்.

படிக்க வேண்டும்

spot_img