கோவை மாநகர காவல்துறை, கோவை கிட்னி ஹெல்த் இந்தியா சார்பில் காவலர் மருத்துவமனையில் காவலர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான இலவச மருத்துவ முகாம் இன்று நடந்தது. இதனை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
நிகழ்வில் ஆயுதப்படை காவல் துணை ஆணையர் ராஜ்கண்ணா, உதவி ஆணையர் டி.நாகராஜன், கிட்னி ஹெல்த் இந்தியா பேராசிரியர் டாக்டர் நீலமேகம் கபாலி, நிறுவனர் டிரஸ்டி டாக்டர் பிரபு காஞ்சி, சுபா பழனி, வாகனப்பிரிவு காவல் ஆய்வாளர் கே.கோவிந்தராஜூ, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் எம்.பெரியசாமி ஆகியோர் பங்கேற்றனர்.