கோவை இளம் கிறிஸ்தவ பெண்கள் சங்கத்தின் சார்பில் YWCA அரங்கில் நாளை (7ம் தேதி) மாலை 6.30 மணிக்கு தேவதூதன் & தேவலோகத்தின் கிருபை என்ற தலைப்பில் ஜெ.எஸ்.கென்னடி சீனியர் நடத்தும் கிறிஸ்துமஸ் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வுக்கு இளம் கிறிஸ்தவ பெண்கள் சங்கத்தின் தலைவி செல்வி நிர்மலா சேகர் தலைமை தாங்குகிறார். இதில் சிறப்பு விருந்தினராக டாக்டர் மேத்யூ செரியன் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார்.



