கோவை டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் 10ம் ஆண்டு விருது வழங்கும் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா நடை பெற்றது.
டாக்டர் என்.ஜி.பி. கல்விக் குழுமங்களின் செயலாளர் மருத்து வர் தவமணிதேவி பழனிசாமி வர வேற்றார். உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி தலைமை வகித்து பேசியதாவது:
அமெரிக்காவில் வசித்தபோதும் கூட, எனது நண்பர்களுடன் தாய் மொழி தமிழிலேயே பேசுவேன். அவர்களுக்கு தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து எப்போதும் எடுத்துரைப்பேன். தமிழ் மொழியின் சிறப்பைப் பாதுகாக்க என்னால் இயன்ற பணிகளை நிச்சயமாக செய்வேன்.
தமிழ்மொழிக்குத் தொண்டாற்றி வந்திருக்கின்ற விருது பெறுகின்ற படைப்பாளர்களுக்கு விருது வழங்குவதில் மிகவும் பெருமை கொள்கிறேன் என்றார்.
விருது பெறுபவர்களின் சிறப் புகள் குறித்து கவிஞர் சிற்பி பால சுப்ரமணியம் பேசினார். உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி, சிற்பி யின் “பாரதி கைதி எண் 253” என்ற ஆங்கில மொழியாக்கக் கவிதை நூலை வெளியிட்டார்.
இவ்விழாவில் முனைவர் ப.மருதநாயகம், நூல் குறித்து சிறப்புரையாற்றினார். அதைத்தொடர்ந்து, உ.வே.சா. தமிழறிஞர் விருது முனைவர் பா.ரா. சுப்ரமணியனுக்கு வழங்கப்பட்டது. பெரியசாமித்தூரன் படைப்பாளர் விருது எழுத்தாளர் நாஞ்சில் நாட னுக்கு வழங்கப்பட்டது.
டாக்டர் நல்ல பழனிசாமி பிற துறை தமிழ்த் தொண்டர் விருது முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு வழங்கப்பட்டது. சிறப்பு விருதுகள் முனைவர் சு.சண்முகசுந்தரம், முனைவர் ஆ.மணி, எழுத்தாளர் க.அம்சப்ரியா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். பெ.இரா.முத்துசாமி நன்றி கூறினார்.



