இந்தியாவின் மிகப் பெரிய எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா, தனது ‘’எஸ்1 எக்ஸ் பிளஸ்’’ ஸ்கூட்டர் வாகனத்துக்கு ரூ.20 ஆயிரம் வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது.
இந்த தள்ளுபடி தொகை போக, ‘’எஸ்1 எக்ஸ் பிளஸ்’’ வாகனம் தற்போது ரூ.89,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2 வாட் மின்சார ஸ்கூட்டரான இந்த வாகனத்துக்கு நாடு முழுவதும் தற்போது கிராக்கி ஏற்பட்டுள்ளது.
உயர்ந்த செயல்திறன், மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள், மலிவு விலை, சிறந்த பயண அனுபவம் ஆகியவை ‘’எஸ்1 எக்ஸ் பிளஸ்’’ ஸ்கூட்டரின் சிறப்பம்சமாகும். 3 கிலோவாட் பேட்டரி, 151 கி.மீ. பயண உத்தரவாதம் போன்றவை இதன் தனி சிறப்புகளாகும்.
6 கிலோவாட் ‘’எஸ்1 எக்ஸ் பிளஸ்’’ ஸ்கூட்டர் 40 கி.மீ. வேகத்தை 3.3 விநாடிகளில் எட்டுகிறது. இது அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் செல்லும் திறனுடையது.
‘’எஸ்1 எக்ஸ் பிளஸ்’’ ஸ்கூட்டர் விற்பனையை விரிவுபடுத்தும் வகையில் கடந்த 3ம் தேதி முதல் ‘’டிசம்பர் டு ரிமெம்பர்’’ என்ற பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது.
இது குறித்து ஓலா நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி அன்சுல் கண்டேல்வால் கூறுகையில், ‘’எஸ் 1 புரோ ரூ.1,47,499-க்கும், எஸ்1 ஏர் ரூ.1,19,999-க்கும், எஸ்1 எக்ஸ் (3 கிலோவாட்), எஸ்1 எக்ஸ் (2 கிலோ வாட்) ஸ்கூட்டர்கள் முறையே ரூ.99,999 மற்றும் ரூ.89,999 என்ற விலையில் பல்வேறு சலுகைகளுடன் கிடைக்கின்றன’’ என்றார்.