fbpx
Homeபிற செய்திகள்கோவை நேரு நகர் லயன்ஸ் சங்கம் சார்பில் தீபாவளி கொண்டாட்டம்

கோவை நேரு நகர் லயன்ஸ் சங்கம் சார்பில் தீபாவளி கொண்டாட்டம்

பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242-சி மாவட்டத்தின் நேரு நகர் லயன்ஸ் சங்கத்தின் சார் பாக கோவை சிட்ரா, நேரு நகர், காளப்பட்டி ஆட்டோ டிரைவர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு முன்னாள் தலைவர் லயன் பாஸ்கர் மற்றும் லயன் பரிமளா பாஸ்கர் தலைமையில், லயன் ஹரீஷ் பாஸ்கர் மற்றும் ஜிஎல்டி ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் முன்னிலையில் புத்தாடையும், தீபாவளிப் பரிசும் வழங்கப்பட்டது.

சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் ஆளுநர் லயன். ராம்குமார், ஐஎல்டி ஒருங்கிணைப்பாளர் லயன் பாஸ்கர், வட்டாரத் தலைவர் லயன் சுப்பு செந்தில்குமார், லயன் மோகன்ராஜ், நேரு நகர் சங்கத் தலைவர் லயன் கிருஷ்ணமூர்த்தி,
முன்னாள் சங்க தலைவர்கள் லயன் நந்தகுமார், லயன் லோகநாதன், செயலாளர்கள் லயன் பொறியாளர் தேஜஸ்வினி செந்தில்குமார், லயன் திவ்யதர்ஷினி ஹரீஷ், கோவிந்தராஜ், திவாகர், லயன் கிரீஷ் மற்றும் சுமார் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டு தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img