Homeபிற செய்திகள்தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவை மேயர்

தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவை மேயர்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் கோவை மாநகராட்சி சார்பில் கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளதை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர், பழங்கள், ஓ.ஆர்.எஸ். ஆகியவற்றை வழங்கி, தொப்பி மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

உடன் மாநகராட்சி துணை ஆணையாளர்கள் ஷர்மிளா, சிவகுமார், மண்டல தலைவர் மீனாலோகு, பொதுசுகாதார குழுத்தலைவர் மாரிச்செல்வன், பணிகள் குழுத்தலைவர் சாந்திமுருகன், மாமன்ற உறுப்பினர் வித்யா ராமநாதன், உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், செயற்பொறியாளர் கருப்பசாமி, நகரமைப்பு அலுவலர் கருப்பாத்தாள், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, மண்டல சுகாதார அலுவலர் குணசேகர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img