fbpx
Homeபிற செய்திகள்தமிழகத்தில் 10 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் சிறு தானியம் சாகுபடி- கோவையில் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் பேட்டி

தமிழகத்தில் 10 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் சிறு தானியம் சாகுபடி- கோவையில் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் பேட்டி

தமிழகத்தில் சிறுதானியங்கள் பயரிட ஊக்கவிக்கப்பட்டு வருவ தாகவும்,10 லட்சம் ஹெக்டர் பரப் பளவில் சிறு தானியம் பயிர் செய்யப் பட்டுள்ளதாக ,தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கோவையில் தெரிவித்துள்ளார்.

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சர்வதேச சிறுதானிய கருத்தரங்கு மற்றும் எதிர்காலம் சார்ந்த சிறுதானிய உணவுப் பொருட்கள் கண்காட்சியை தமிழக, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.

சிறுதானிய கண்காட்சியில் அமைக்கப்பட்டு இருந்த அரங்குகளை அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் செய் தியாளர்களிடம் அமைச்சர் கூறிய தாவது: கண்காட்சியில் புதிய ரக சிறு தானியங்கள், விவசாயிகளுக்கு அதிக லாபம் தரக்கூடிய விதைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது எனவும், சிறு தானியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தமிழகத்தில் சிறுதானியங்கள் பயிரிட ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

சிறுதானிய உற்பத்தி இலக்கு

10 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் சிறு தானியம் பயிர் செய்யப்படுகிறது. 38.2 மெட்ரிக் டன் சிறுதானிய உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை பல்கலைக்கழகத்தில் புதிய ரகங்கள், அதிக லாபம் தரக்கூடிய பயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

வெளிநாடுகளில் புதிய பயிற்சியை மேற்கொள்ள ஆராய்ச்சி மாணவர்களை அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. துபாய், கனடா போன்ற நாடுகளில் மாணவர்கள் அங்குள்ள புதிய முறைகள் அறிந்து பயிலக்கூடிய பயிற்சி மேற்கொள்ள வசதியாக இந்த திட்டம் பல்கலைக்கழகத்தில் துவங்கப்பட்டு உள்ளது. இந்தாண்டு 50 கோடி ரூபாய் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்தார்.

சிறு தானிய வளர்ச்சிக்காக தரமான விதைகள் உள்ளிட்ட செயல்பாட்டிற்காக 82 கோடி ரூபாய் அரசால் ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது. தென்னை கள் இறக்க விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக அனைத்து தரப்பினரிடையேயும் கலந்தாலோ சித்து அரசு முடிவு எடுக்கும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.

தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்க நிகழ்ச்சியில் வேளாண்மைத் துறை சார்ந்த ஓய்வு பெற்ற விஞ்ஞானிகளுக்கு அமைச்சர் நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img