கோவை அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெறுவதையொட்டி நேற்று (செவ்வாய்க்கிழமை) விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதனை வட்டார கல்வி அலுவலர் மேரி மார்கரேட் துவக்கி வைத்தார். ஒருங்கிணைந்த கல்வித்திட்ட வட்டார வள மைய மேற்பார்வையாளர் ரேணுகா, ஆசிரியர் பயிற்றுர்கள், சிறப்பு கல்வி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் ரவி முருகன், ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.