fbpx
Homeபிற செய்திகள்கோவை - மேட்டுப்பாளையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 600 பேர் கைது

கோவை – மேட்டுப்பாளையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 600 பேர் கைது

கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறி யல் போராட்டத்தில் ஈடுப்டடனர். இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பி.எஸ்.என்.எல் அலுவல கம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் விலைவாசி உயர்வை கண்டித்தும், அதிகரித்து வரும் வேலை யின்மையை கண்டித்தும் மத்திய அரசை கண் டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ரேஸ் கோர்ஸ் போலீசார் மறி யல் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பெண்கள் உட்பட 305 பேரை கைது செய்தனர்.

இதே போல் கோவையில் சரவணம் பட்டி, மேட்டுப்பாளையம் ரோடு பி.எஸ்.என்.எல் அலுவலகம் உட்பட 9 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இதேபோல தொழிற் சங்கங்கள் இணைந்து மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கனகராஜ் தலைமையில் சிஐடியூ பொதுத்தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் பாஷா முன்னிலையில் ரயில் மறியல் போராட் டத்தில் ஈடுபட ஊர்வலமாக சென்றனர்.

பின்னர், 75 பெண் கள் உட்பட 300 – க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையம் செல்ல முற்பட்டனர். அப்போது, அவர்களை நடுவழியிலேயே தடுத்து நிறுத்தி மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலாஜி தலைமையில் பாதுகாப்பு பணியில் இருந்த மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் நவ நீதகிருஷ்ணன், காரமடை ஆய்வாளர் ராஜசேகரன், சிறுமுகை ஆய்வாளர் சித்ரா மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். அப்போது, போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக் கும் இடையே சற்று தள் ளுமுள்ளு ஏற்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img