கோவை 100 அடி ரோடு, மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸில் உலகின் கலைநயமிக்க பிரைடல் நகைகளின் கண்காட்சி, விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்த கண்காட்சியில் மிகவும் மதிப்புமிக்க மற்றும் தனித்துவமுடைய மணப்பெண்ணுக்கான தங்கம், வைரம், பிளாட்டினம், நகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சியை பூபதி, கீதாசெல்வி குடும்பத்தினர், ஸ்ரீனிவாசன், அபர்ணா குடும்பத்தினர், டாக்டர் பத்மா குடும்பத்தினர், வள்ளி குடும்பத்தினர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் தமிழ்நாடு மேற்கு மண்டல தலைவர் நௌசாத், கோவை 100 அடி ரோடு மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் கிளை தலைவர் அனீஸ் ரஹ்மான், வர்த்தக மேலாளர் தேவராஜ், விற்பனை மேலாளர் அஜித் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான மைன், பிரம்மாண்ட வடிவமைப்புகளை கொண்ட, வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட எரா, மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான பிரீசியா, கைவினை கலைஞர்களால் செய்யப்பட்ட எத்தினிக், கலாசாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிவமைப்புகளில் உருவான டிவைன் ஆகிய நகைகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
இந்த கண்காட்சி வரும் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள நகைகளை வாடிக்கையாளர்கள் சிறப்பு விலையில் வாங்கலாம்.
மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் நிறுவனம் 12 நாடுகளில் 335-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் செயல்பட்டு வருகிறது.
அனைத்து நகைகளுக்கும் ஆயுள் முழுவதும் இலவச பராமரிப்பு, அனைத்து நகைகளையும் எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உத்தரவாதம் உள்ளிட்ட 10 வாக்குறுதிகளை வாடிக்கையாளர்களுக்கு மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் நிறுவனம் வழங்குகிறது.