fbpx
Homeபிற செய்திகள்இந்தியாவில் சிறந்த கம்பெனி செயலறிஞர்கள் நிறுவனம்: கோவை கே.எஸ்.ஆர். அன் கோ நிறுவனத்துக்கு தேசிய அளவில்...

இந்தியாவில் சிறந்த கம்பெனி செயலறிஞர்கள் நிறுவனம்: கோவை கே.எஸ்.ஆர். அன் கோ நிறுவனத்துக்கு தேசிய அளவில் விருது

இந்தியாவில் சிறந்த கம்பெனி செயலறிஞர்கள் நிறுவனமாக கோவை கேஎஸ்ஆர் அன் கோ நிறு வனம் தேர்வாகி தேசிய அளவில் விருது பெற்றுள்ளது.
இந்திய கம்பெனி செயலறிஞர்கள் கல்விக் கழகம் (ஐசிஎஸ்ஐ) வழங்கும் விழா பெங்களூருவில் நடந்தது. சத்குரு மதுசூதன் சாய் மற்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் தலைமை தாங்கினர்.

பல்வேறு மாபெரும் தொழில் நிறுவனத் தலைவர்கள், மற்றும் சிறப்பு விருந்தினர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்குபெற்ற இந்த விழா வில் கோவை கேஎஸ்ஆர் அன் கோ நிறுவனத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அதனை டாக்டர் கே.எஸ். ரவிச்சந்திரன் மற்றும் அவ ரது குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

இந்த துறையில் வழிகாட்டியாக உள்ள டாக்டர் ரவிச்சந்திரன், நிறுவனங்களின் பங்குதாரர்கள் பிரச்னைகள், நிறுவனங்களை இணைத்தல், வணிக தாவாக்களுக்கும், நலிவடைந்த நிறுவனங்களின் நடத்த வழிகாட்டுதலுக்கும், அறிவுசார் சொத்துரிமை பிரச்னைகள் போன்றவைகளை தீர்ப்பதிலும் ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளார்.

டாக்டர் கே.எஸ் ரவிச்சந்திரன் 1993ல் இந்த நிறுவனத்தை துவங்கினார். கோவையைத் தலை மையிடமாகக் கொண்டு, 32 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் இந்த நிறுவனம், சென்னை மற்றும் பெங்களுருவிலும் இயங்கி வருகிறது.

இந்நிறுவனம் விருது பெறுவது முதல்முறையல்ல. 2020ம் ஆண்டில் இந்த கம்பெனியின் பங்குதாரர் டாக்டர் சி.வி.மதுசூதனன், சிறந்த செயலக அறிக்கைக்கான விருதை பெற்றுள்ளார்.

இதன் தலைவராக இருக்கும் டாக்டர் கே.எஸ்.ரவிச்சந்திரன் பல தலைமைப் பொறுப்புக்களை வகித்துள்ளார். கரூர் வைஸ்யா வங்கியின் டைரக்டராக எட்டு வருடங்கள் சிறப்பாக பணியாற்றியுள்ளார். பல புத்தகங்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img