fbpx
Homeபிற செய்திகள்வரும் கல்வி ஆண்டில் ரூ.2 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்படும்

வரும் கல்வி ஆண்டில் ரூ.2 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்படும்

அடுத்த கல்வி ஆண்டில் மாணவ, மாணவிகளுக்கு ரூ.2 கோடிக்கும் அதிகமான கல்வி உதவித்தொகை வழங் கப்படும் என கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி தலைவர் கே.பி.ராமசாமி அறிவித்துள்ளார்.

கோவை, அரசூர் கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடப்பு கல்வியாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 952 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்கள், விளையாட்டு பிரிவு மாணவர்கள், பணியாளர்களின் குழந்தைகளுக்கான உதவித்தொகை மற்றும்
பொருளாதாரத்தில் பின்தங்கிய வர்களுக்கான உதவித்தொகை என பல்வேறு பிரிவுகளில் உதவித்தொகை வழங்கப்பட்டது.

விழாவில், கேபிஆர் குழுமங்களின் தலைவர் கே.பி.ராமசாமி, அடுத்த கல் வியாண்டில் மாணவ மாணவிகளுக்கு சுமார் ரூ. 2 கோடி அளவுக்கு கல்வி உத வித்தொகையை அறிவித்தார்.

விழாவில் அவர் பேசுகையில், ‘மாணவர்கள் தங்களது அறிவுத்திறனை மேம்படுத்தி பன்னாட்டு நிறுவனங்களில் மிக உயர்ந்த இடத்தில் பணிபுரியவும், தொழிலதிபர்களாகவும் உருவாக இங் குள்ள வசதிகள் உதவும்.

கல்வியின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்து எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது’ என்றார்.

விழாவில், சிறப்பு விருந்தினர் கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா, கல்லூரி முதல்வர் மா. ராமசாமி ஆகியோரும் பேசினர்.

படிக்க வேண்டும்

spot_img