fbpx
Homeபிற செய்திகள்‘முடியாது என்று எந்த செயலையும் கைவிடக்கூடாது’ கே.பி.ஆர். கல்லூரியில் மாணவர்களுக்கு அறிவுரை

‘முடியாது என்று எந்த செயலையும் கைவிடக்கூடாது’ கே.பி.ஆர். கல்லூரியில் மாணவர்களுக்கு அறிவுரை

கே. பி. ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 10-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
கே. பி.ஆர். கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக இயக்குநர் நடராஜன் தலைமை வகித்தார்.

கல்லூரி முதல்வர் ராமசாமி வர வேற்றார். அண்ணா பல்கலைக்கழகத் தின் துணைவேந்தர் முனைவர் வேல்ராஜ், இஸ்ரோ, சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் ஆகியோர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.

வீரமுத்துவேல் பேசுகையில், ஒரு செயலை தொடர்ந்து செயல்ப டுத்தினால் மட்டுமே அதில் வெற் றிக்கான முடியும். ஆகையால், முடியாது என்று எந்த செயலையும் கைவிடாமல் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் அனுபவத்தில் இருந்து பாடங்களை கற்றுக் கொள்ளுங்கள் என்றார்.

துணைவேந்தர் வேல்ராஜ் பேசுகையில், வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்காற்றி வருகிறது. ஆகையால், மாணவர்கள் தொழில்நுட்பத் துறையில் அதீத முனைப்புடன் அவரவர் திறன்களை வெளிக்கொண்டு வரவேண்டும்.

மொபைல் போன்களுக்கு அடிமையாகாமல் தொழில்நுட்ப துறையில் சிறந்த தொழில்முனைவோராக வேண்டும் என்றார். கே.பி.ஆர். நிறுவனங்கள் அளவில் முதலிடம் பிடித்த சீனிவாசன் என்ற மாணவனுக்கு சிறப்புப் பதக்கம், பரிசு வழங்கப்பட்டது.

இளநிலை பிரிவில் 8 மாணவர்கள், முதுகலை பிரிவில் 4 மாணவர்களுக்கு சிறப்புப் பரிசு பதக்கங்கள் வழங்கப்பட்டன. 2018 -2022-ம் கல்வியாண்டில் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு முடித்த 631 மாணவர்களுக்கும், 47 முதுகலைப் பொறியியல் மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img